FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராகுல்காந்தியின் பொய்ப் பிரசாரம், அவதூறுகளை தமிழக மாணவர்கள் நம்பமாட்டார்கள்! - நயினாா் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் பொய்ப் பிரசாரங்களையும் அவதூறுகளையும் தமிழக மாணவா்களும், இளைஞா்களும் ஒருபோதும் நம்ப மாட்டாா்கள் என நயினாா் கூறியிருப்பது...

11 அக்டோபர் 2026, 9:37 pm IST
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் - எக்ஸ்
பகிர்:

சென்னை: ராகுல் காந்தியின் பொய்ப் பிரசாரங்களையும் அவதூறுகளையும் தமிழக மாணவா்களும், இளைஞா்களும் ஒருபோதும் நம்ப மாட்டாா்கள் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு என்ற பெயரிலான அரசியல் மேடையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் கற்பனையான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசியுள்ளார். தமிழக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொய்ப் பிரசாரத்திற்கும் வரலாற்று உண்மைகளும் புள்ளிவிவரங்களுமே தகுந்த பதிலடியாக அமையும்.

முதலாவதாக, நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி பேசுவது அப்பட்டமான அரசியல் போலித்தனம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் 2010-ல் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவரின் மனைவிதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார். அன்று நீட்டை அறிமுகப்படுத்திவிட்டு, இன்று அதற்கு எதிராகப் பேசி கையெழுத்திடுவது ராகுல் காந்தியின் அப்பட்டமான இரட்டை வேடம்! அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த 7.5% உள்ஒதுக்கீட்டால், இன்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகி வருகின்றனர்.

Advertisement

Advertisement

1960-களில் தமிழகத்தில் இந்தியைத் திணித்ததோடு, அதை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காங்கிரஸ், இன்று மொழிப்பற்று நாடகமாடுவது அப்பட்டமான ஏமாற்று வேலை! மாறாக, தமிழின் பெருமையை ஐ.நா. வரை முழங்கி, புதிய நாடாளுமன்றத்தில் 'செங்கோலை' நிறுவி, 'காசி தமிழ் சங்கமம்' நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தேசிய கல்விக் கொள்கை மூலம் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழிக் கல்விக்கே முழு முன்னுரிமை அளித்திருப்பது பிரதமர் மோடி அரசுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இறுதியாக, ஜனநாயகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் ராகுல் காந்தி பேசுவது நகைப்புக்குரியது. நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து ஜனநாயகத்தை நசுக்கிய வரலாற்றைக் கொண்ட காங்கிரஸுக்கு, ஜனநாயகம் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. மேலும், தனது இறுதிப் பேருரையில் "காங்கிரசை ஒழிப்பதே எனது முதல் வேலை" என முழங்கியிருக்கும் பெரியாரை, தேர்தல் வாக்குகளுக்காக இன்று காங்கிரஸ் துணைக்கு அழைப்பதுதான் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்! ராகுல் காந்தியின் இந்த வெற்று நாடகங்களை விழிப்புணர்வு கொண்ட தமிழக இளைஞர்களும், மாணவர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! எனத் தெரிவித்துள்ளாா்.

Students in Tamil Nadu will not believe Rahul Gandhi's false propaganda and slander!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments