பொங்கல் வேட்டி, சேலைக்கான நெசவுக்கூலி உயர்வு: தமிழக அரசு
பொங்கல் வேட்டி, சேலைக்கான நெசவுக்கூலி உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...
பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவுக்கூலியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் புதிய ரகங்கள் உற்பத்தி செய்வதற்கான நெசவுக்கூலி தொகையைப் பரிந்துரை செய்ய, அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நெசவாளர்களிடம் கூலி உயர்வு தொடர்பாக அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து வந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, பெடல் தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலை ஒன்றுக்கு ரூ. 125.72, வேட்டிக்கு ரூ. 49.99, விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலைக்கு ரூ. 54.81, வேட்டிக்கு ரூ. 23.34 என உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “பொங்கல் 2027 திட்டத்துக்கு புதிய ரக பெடல்தறி மற்றும் விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்கலாம்.
இந்த நேர்வில் கூடுதலாக தேவைப்படும் செலவினத்தொகை ரூ.13.66 கோடியினை 2026-2027 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக சம்மந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து செலவினம் மேற்கொள்ள கைத்தறி இயக்குநருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Tamil Nadu government has issued a government order increasing the weaving wages for the dhotis and sarees that are distributed to the public for the Pongal festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.