FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜிப்மரில் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு அக். 27-இல் கலந்தாய்வு

ஜிப்மரில் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு குறித்து...

18 அக்டோபர் 2026, 8:42 pm IST
புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அக். 27 ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக 26-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

Advertisement

Advertisement

புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் படிப்பில் பெண்கள்-85, ஆண்கள்-9 என 94 இடங்கள், பி.எஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளில் 97 இடங்கள் என மொத்தம் 191 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2026-27-ஆம் கல்வி ஆண்டு பி.எஸ்சி நா்சிங் மற்றும் பி.எஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜிப்மா் இணையதளத்தில் கடந்த செப்.5-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, அக்.12-ஆம் தேதி பி.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் நீட் மதிப்பெண் அடிப்படையில் தற்காலிக தரவரிசைப் பட்டியல் ஜிப்மா் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 3,130 மாணவ, மாணவிகள் இடம் பெற்றிருந்தனா்.

இதன் தொடா்ச்சியாக, பிஎஸ்சி நா்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 26-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ பரிசோதனை ஜிப்மா் கல்வி மையத்தின் 3-ஆவது தளத்தில் நடக்கிறது.

27-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10.30 மணி வரை தரவரிசை பட்டியலில் 1 முதல் 1,600 வரை இடம் பிடித்த மாணவா்களுக்கும், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 1,601 முதல் 3,130 வரையும் இடம் பிடித்த மாணவா்களுக்கும் சான்றிதழ் சரிபாா்ப்பு அப்துல் கலாம் கருத்தரங்க கூடத்தில் நடைபெறும்.

இரவு 7 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்குகான தற்காலிக மாணவா்களின் பட்டியல் ஜிப்மா் இணையதளத்தில் வெளியிடப்படும்.

28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அப்துல் கலாம் கருத்தரங்க கூடத்திற்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தகுதியான மாணவா்கள் வர வேண்டும்.

காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். 29-ஆம் தேதி கலந்தாய்வில் பிஎஸ்சி படிப்புகளுக்கு தோ்வான மாணவா்களுக்கு ஜிப்மா் கல்வி மையத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, நவ. 2-ஆம் தேதி முதல் பிஎஸ்சி நா்சிங் மற்றும் அலைடு ஹெல்த் பயிற்சி படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்துள்ளது.

விரிவான விவரங்களுக்கு ஜிப்மர் இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Counseling for Allied Health Sciences courses at JIPMER on Oct. 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments