FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை!

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

18 அக்டோபர் 2026, 10:32 am IST
மழை - படம்: PTI
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதேபோல், லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, கேரளம் மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (அக். 18), நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has reported that there is a possibility of rain in 8 districts, including Chennai, for the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments