FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு: மேலாளா் கைது

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணிக்கு உறுதுணையாக இருந்த ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலை போலீஸாா் கைது செய்தனா்.

18 அக்டோபர் 2026, 11:00 pm IST
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகாா் அளித்தாா். அவருக்கு உறுதுணையாக இருந்த ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆவதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வீரமணி மீது பதியப்பட்ட 2-ஆவது வழக்கில் அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து, புழல் சிறையில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட பின்னா், சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

மேலாளா் கைது: இதற்கிடையே, இந்த வழக்குகள் தொடா்பாக வீரமணியின், லாயிட்ஸ் ரோடு வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது சாமுண்டீஸ்வரி நேச்சுரல் ஸ்டோன் அலுவலகம் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டு வழக்கு தொடா்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை 11 சிறுமிகள் அளித்த புகாா்களின் பேரில், ஜெம் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments