FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் கனமழை: மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் கனமழை குறித்து...

21 அக்டோபர் 2026, 9:10 am IST
கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் மழைநீர் - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வெட்டால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கணபதி, சங்கனூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, துடியலூர், இடையர்பாளையம், கணுவாய் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

குறிப்பாக, கவுண்டம்பாளையம் –நல்லம்பாளையம் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் ஓடுவதால் இருசக்கர வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றவும், மின்வெட்டுப் பாதிப்புகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Heavy rain continues in Coimbatore for more than 2 hours: Public suffers from power cuts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments