FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஊன்றிய விதை மரமாகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியில் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஊன்றிய விதையை மரமாகிட வேண்டும் என ஸ்டாலின் கூறியிருப்பது...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். - டிஎன்எஸ்
பகிர்:

சோழர் காலச் சிறப்புகளை இந்த காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திராவிட மாடல் ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவு:

"நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் ராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இந்த காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திராவிட மாடல் ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!

பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் தவெக அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.

ராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க! என கூறியுள்ளார்.

The seed planted to build a Chola museum at a cost of Rs. 56 crore should become a tree: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments