FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடந்த 24 மணி நேரத்தில் சாத்தூரில் அதிகபட்சமாக 164 மி.மீ. மழை பதிவு!

சாத்தூரில் அதிகபட்சமாக 164 மி.மீ. மழை பதிவாகி இருப்பது தொடர்பாக...

31 வினாடிகள் முன்பு
மழை - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை நிலவரத்தைப் பார்க்கும்போது, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிகபட்சமாக 164 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்தப் புயல் சின்னம் நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அக். 26 ஆம் தேதி மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமாக தீவிரமடைந்துள்ளது. நேற்று (அக். 22) தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை அளவு:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள 3 பகுதிகளில் அதிகபட்சமாக தலா 164 மி.மீ., 143 மி.மீ., 142 மி.மீ. மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 133.6 மி.மீ, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 115.2 மி.மீ., மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 108.5 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் குடவாசலில் 105. 6 மி.மீ., ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 100.4 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

summary

Looking at the rainfall in Tamil Nadu in the last 24 hours (till 8.30 am), Sattur in Virudhunagar district recorded the highest rainfall of 164 mm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments