அர்னாப் அல்ல... இனி ஒர்னாப் புயல்!
அர்னாப் அல்ல... ஒர்னாப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி...
மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயலை ஒர்னாப் என உச்சரிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்துள்ளது.
வங்க தேசம் கொடுத்த இந்த அர்னாப் புயல் பெயரை இனி ஒர்னாப் என உச்சரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதி தீவிர புயலாக மாறிய அர்னாப் புயலானது, இன்று முதல் ஒர்னாப் புயல் என பெயரும் மாறுகிறது. தொலைக்காட்சித் தொடர்களில் வருவதுபோல, இனி இவருக்கு பதில் இவரே தொடர்வார் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து அர்னாப் இன்று முதல் ஒர்னாப் என்றே அழைக்கப்படுவார்.
Advertisement
Advertisement
இந்த அதி தீவிர புயல் ஒர்னாப், ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் ஒடிசாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி தீவிர புயலாக உருவானது ஒர்னாப்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அா்னாப்’ (இப்போது ஒர்னாப்) எனப் பெயா் சூட்டப்பட்டது. இது தொடா்ந்து வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஒர்னாப் புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்டோபா் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் - ஏனாம் இடையே, பாபட்லா-விசாகப்பட்டினம் இடையிலான கடலோரப்பகுதியில் மிகத் தீவிர புயலாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கரையைக் கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒர்னாப் என்ற பெயரை வங்கதேசம் வழங்கியிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா கொடுத்திருக்கும் முரசு இடம்பெற்றுள்ளது. ஒர்னாப் என்றால் வங்க மொழியில் கடல் என்று அர்த்தமாகும்.
இந்த ஆண்டின் முதல் புயல்.. பெயரில் இத்தனை குழப்பம்
இதுநாள்வரை அர்னாப் என வழங்கப்பட்டு டிரோல் ஆகிவிட்டது. தற்போது ஒர்னாப் என வெளியிட்டால் பலருக்கும் இது புதிய புயலோ என்று சந்தேகம் எழலாம்.
இது இப்படி இருக்க...
கடந்த செப்டம்பர் மாதம் வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவேளை அது புயலாக மாறியிருந்தால் அ(ஒ)ர்னாப் என பெயர் சூட்டப்படும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது புயல் சின்னமாக வலுவடையாததால், அந்தப் பெயர் அப்போது சூட்டப்படவில்லை. அக்டோபரில் உருவாகியிருக்கும் புயலுக்குத்தான் அர்னாப் அல்ல ஒர்னாப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக புயலால்தான் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். ஆனால், இந்த புயலுக்கே ஒரு பெயர் பிரச்னையாக மாறியிருக்கிறது என்று செய்திகளில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.