FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு! எங்கு கிடைக்கும்? என்னென்ன பொருள்கள்?

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என்று தகவல்.

32 வினாடிகள் முன்பு
தீபாவளி - கோப்பிலிருந்து
பகிர்:

சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ.200க்கு, பருப்பு உள்ளிட்ட பத்து பொருள்கள் அடங்கிய தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளைப் போல கூட்டுறவு அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் சென்னையில் நாளை முதல் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், எண்ணெய், மைதா உள்ளிட்ட 10 பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் மக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்படுவதால், தீபாவளிக்கு இனிப்புகள் செய்யவும், விலை உயர்வால் அவதிப்படும் குடும்பத்தினர் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை வாங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான சமையல் எண்ணெய், நெய், மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களும் இதில் இடம்பெறும் என்றும் இதன் மொத்த மதிப்பு ரூ.500 முதல் 600 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ. 500 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்க அரசுக்கு கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments