FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி மளிகை தொகுப்பு வழங்கப்படவுள்ளது பற்றி...

13 அக்டோபர் 2026, 3:08 pm IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு - Gemini AI | Dinamani
பகிர்:

புதுவையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ரூ. 700 மதிப்புள்ள மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில், புதுவையில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 700 மதிப்புள்ள மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அந்த தீபாவளி மளிகை தொகுப்பில், சமையல் எண்ணெய் 2 லிட்டர், சர்க்கரை 2 கிலோ, கடலைப் பருப்பு ஒரு கிலோ, ரவை அரை கிலோ, மைதா அரை கிலோ இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவை அரசு சார்பில் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Rs. 700 Diwali grocery kit for ration cardholders : Puducherry Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments