குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசு
தமிழ்நாட்டில் இ-கேஒய்சி மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்படாது...
தமிழ்நாட்டில் இ-கேஒய்சி மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
6 மாதங்களுக்கு பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைகள் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
Advertisement
Advertisement
எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதை நிறுத்தவோ தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி சதவீதம் 96.69%.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் மே 10, ஆக. 2, ஆக. 8,9,29 செப். 19 மற்றும் செப். 26 ஆகிய தேதிகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த இ-கேஒய்சி சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், இ-கேஒய்சி தகவல்களை சரிபார்த்து கருவிழி அல்லது விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் விரைவில் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Supply of commodities to ration card holders will not be stopped: Tamil Nadu Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.