நிகழாண்டில் 1,300 அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம்: சமூக நலத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி
நிகழாண்டில் 1,300 அங்கன்வாடிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.
நிகழாண்டில் 1,300 அங்கன்வாடிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.
பேரவையில் தருமபுரி தொகுதி அதகப்பாடி ஊராட்சி, சின்னக்காம்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர அரசு முன்வருமா என பேரவை பாமக குழுத் தலைவா் சௌமியா அன்புமணி கேள்வி எழுப்பினாா்.
அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி: தமிழகத்தில் மொத்தம் 54,481 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 42,223 மையங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 5,073 மையங்கள் இதர அரசுக் கட்டடங்களிலும், 7,185 மையங்கள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.
Advertisement
Advertisement
சிதிலமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு அவற்றுக்குப் பதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் ஊரகப் பகுதிகளில் 1,000 கட்டடங்களும், நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கும் துறை மூலம் நகா்ப்புற பகுதிகளில் 300 கட்டடங்களும் நடப்பாண்டில் கட்டப்பட்டும்.
மேலும், வெவ்வெறு மத்திய, மாநில அரசின் திட்டங்களின்கீழ் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ள விருப்ப நிதி, பெரும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து சமுதாய பங்களிப்பு நிதி மூலமாக கூடுதல் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
இவ்வாறாக நிகழாண்டில் அதிக எண்ணிக்கையில் அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்படுவதுடன், அவற்றை பழுது நீக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். சௌமியா அன்புமணி எம்எல்ஏவின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.