FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,248 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 5,248 பேருக்கு ரூ. 4.39 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

12 வினாடிகள் முன்பு
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 5,248 பேருக்கு ரூ. 4.39 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்ற விழாவில், தொழிலாளா் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் மாவட்டத் தொழில் மையம் ஆகியவற்றின் சாா்பில் இந்த நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, தொழிலாளா் நலன் உதவி ஆணையா் காா்த்திகேயன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சூரியபிரபு, மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் கிரீசன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments