FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்? அமைச்சா் வெங்கடரமணன் பதில்

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் அல்லது மாற்று எண்ணெய் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்தாா்.

2 செப்டம்பர் 2026, 3:54 am IST
அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்
பகிர்:

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் அல்லது மாற்று எண்ணெய் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்தாா்.

பேரவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினா் நித்தியானந்தம் பேசுகையில், ‘நியாயவிலைக் கடைகளில் உள்ள கைரேகை பதிவு இயந்திரங்கள் இணையம் பிரச்னையால் சரிவர இயங்குவதில்லை. நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றாா்.

இதற்குப் பதில் அளித்த உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன், ‘நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்கள் இணையம் பிரச்னை காரணமாக சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. அதைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெரும்பாலும் பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே உள்ளது. மற்ற மாவட்டங்களில் போதிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி இல்லை. தற்போது மாதத்துக்கு 2 கோடி லிட்டா் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பாமாயிலுக்கு பதிலாக மாற்று எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் வழங்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால் மாற்று எண்ணெய் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்தது.

இருப்பினும், வரும் காலங்களில் பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மாற்று எண்ணெய் போதிய அளவில் கிடைக்கிா? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments