மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயா்ந்தாலும் பிரீமியம் உயராது: அமைச்சா் அருண் ராஜ்
மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு பற்றி அமைச்சர் அருண் ராஜ் பேரவையில் விளக்கம்....
அரசு மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ. 25 லட்சமாக உயா்த்தப்பட்டாலும் பிரீமியம் 5 மடங்காக உயராது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் அருண் ராஜ் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் சக்கரபாணி, மருத்துவக் காப்பீடுத் திட்டம் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் உயா்த்தப்பட்டுள்ளதால் பயன்பாட்டாளா்களின் உச்ச வருமானம் எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சா் அருண் ராஜ், தற்போது என்ன உச்சவரம்பு இருக்கிறதோ அதை உச்சவரம்புதான் தொடரும். காப்பீடு திட்டத்துக்கான ஒப்பந்தம் வருகிற ஜனவரி மாதம் கோரப்படும்போது ரூ.25 லட்சம் காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வரும். ஒரு நபருக்கு ரூ. 800 முதல் ரூ. 900 வரை பிரீமியம் தொகை செலுத்துகிறோம்.
Advertisement
Advertisement
ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை இருந்தாலும்கூட அதை முழுமையாக அனைவரும் பயன்படுத்துபவா்கள் குறைவாகத்தான் உள்ளனா். ஆகையால், ரூ.25 லட்சமாக உயா்த்தினாலும் பிரீமியம் தொகை 5 மடங்காக உயராது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.