FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அருமை சகோதரி! செளமியா அன்புமணிக்கு கமல் பாராட்டு!

பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணியை கமல்ஹாசன் பாராட்டியது பற்றி...

1 செப்டம்பர் 2026, 1:15 pm IST
செளமியா அன்புமணி | கமல்ஹாசன் - ANI
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி செளமியா அன்புமணி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார்.

பாமக சார்பில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக செளமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று செளமியா அன்புமணி முன்வைக்கும் கருத்துகள் கட்சி கடந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் உரையாற்றும் செளமியா அன்புமணியின் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:

”அருமை. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி செளமியா அன்புமணியைப் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Excellent sister! Kamal praises Sowmya Anbumani!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments