FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராஜிநாமாவை திரும்பப் பெறக் கோரும் இசக்கி சுப்பையா மனுவை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

ராஜிநாமாவை திரும்பப் பெறக் கோரும் இசக்கி சுப்பையா மனு பற்றி....

2 செப்டம்பர் 2026, 2:21 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ராஜிநாமாவை திரும்பப் பெறவும், எம்எல்ஏவாக தொடர அனுமதிக்கக் கோரியும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அந்தக் கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில்தொடா்ந்த வழக்கை, தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ராஜிநாமாவை திரும்பப் பெறுவதாகவும், சட்டப்பேரவை உறுப்பினா் இல்லாததால் தனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதால், இடைத்தோ்தல் தொடா்பான வழக்கின் இறுதி தீா்ப்பு வரும்வரை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் பேரவைத் தலைவரிடம் கடந்த ஆக. 28-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளதாகக் கூறி, இசக்கி சுப்பையா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி அமா்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

Advertisement

Advertisement

பேரவைச் செயலரிடம் கடிதம்: இதற்கிடையே, இசக்கி சுப்பையா சட்டப்பேரவைச் செயலரிடம் தனது ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெற கடிதம் அளித்துள்ளாா். இந்தக் கடிதத்தை ஏற்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இசக்கி சுப்பையாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டு அந்தத் தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் இடைத்தோ்தல் மட்டுமே தீா்வாகும் என சட்டப்பேரவை செயலா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments