FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகைக்காக விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றாரா சங்கீதா?

முதல்வர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதன் பின்னணி என்ன என்பது பற்றி?

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:20 pm IST
விஜய் - சங்கீதா - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது முதலே, அதுபற்றி பல தகவல்கள் பரவி வருகின்றன.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், முதல்வர் விஜய் மனைவி தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கணவர் விஜய்யுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்த பிறகுதான், அவர் விவாகரத்து வழக்கைத் தொடர்ந்திருப்பார். பிறகு, திடீரென இந்த முடிவு ஏன்? என்பதே இதுவரை விடை காணப்படாத கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement

விஜய்யுடன் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, விவாகரத்து கோரிய சங்கீதா, விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தது திரையுலகில் அதிகம் பேசப்பட்டது.

அதுபோலவே, சங்கீதா மிகப்பெரிய ஜீவனாம்சம் தொகையைக் கேட்டதாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும் சில உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்தன. ஆனால், பிள்ளைகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் ஜீவனாம்சம் தொகையை குறைத்துக் கொடுக்கவே அவரது கணவர் தரப்பில் முன் வந்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையேதான் விவாகரத்து மனுவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. சிலர், இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், முதல்வராக இருப்பதால், பொது வெளியில் பேசி விவகாரத்து வாங்குவது விஜய்யின் அந்தஸ்தை குலைக்கலாம் என்று கூறப்பட்டிருக்கலாம். இல்லை, தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சங்கீதா தன்னுடைய முடிவை மாற்றியிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், நிச்சயம் பணம் தொடர்பான எந்த விவகாரமும் இதில் இருக்காது, ஏனென்றால், விஜய்யை திருமணம் செய்வதற்கு முன்பே, சங்கீதா, மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் விஜய் மீது காதல் கொண்டதால்தான், திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

உண்மையில், விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டதற்கு என்னதான் காரணம் இருக்கும்? ஆனால், இருவரும் திரும்ப சேர்ந்து வாழ்வார்கள் என்று யாரும் கூறவில்லை. தகவல்களும் தெரிவிக்கவில்லை. அதுபோல, விஜய் வீட்டில் வசிக்க உரிமை அளிக்க வேண்டும் என்றும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்ததையும் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மற்றொருபக்கம், விவாகரத்து மனுவில், நடிகை ஒருவருடன் தகாத உறவு இருக்கிறது என்று சொல்லியிருக்கும் சங்கீதா, விவாகரத்து கொடுத்துவிட்டால், அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வழிவகுத்துவிடுமோ? என்ற அடிப்படையில் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றிருக்கலாமா? என்றும் கேள்விகள் எழுகின்றன.

எனவே, சட்டப்பூர்வ திருமண உறவு இருக்கும்போது, அந்த நடிகையுடன் திருமணம் செய்ய முடியாது, அதிகாரப்பூர்வ மனைவி அந்தஸ்தை பெற முடியாமல் போகலாம் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றால், இந்த நோக்கம் இருந்தால், அவர் ஏன் முதலில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும்? என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறதே?

விவகாரத்து மனு திரும்பப் பெறப்பட்டது பற்றி இதுவரை யாரும் கருத்து கூறாததால், உண்மையில் உண்மை என்னவென்பதில் மர்மம் நீடிக்கிறது. யாராவது மௌனம் கலைத்தால் உண்மை தெரியலாம். இல்லையென்றால் தனியுரிமை என்று கூறி மௌனத்தை நீட்டித்தால்... விடையில்லாத கேள்வியாகவே நீடிக்கும்.

summary

Did Sangeetha withdraw the divorce petition for the sake of the actress?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments