விவாகரத்து வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் மனைவி சங்கீதா திடீர் முடிவு ஏன்? அடுத்து என்ன நடக்கலாம்?
விவாகரத்து வழக்கு வாபஸ் பெறுவதாக முதல்வர் விஜய் மனைவி சங்கீதா எடுத்த திடீர் முடிவும், அடுத்து என்ன நடக்கலாம் என்பதும்...
முதல்வர் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தொடா்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
லண்டனில் இருந்தபடி, விடியோ கான்ஃபரன்சிங் அழைப்பு மூலமாக, சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
விசாரணையின் நிறைவாக, குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விவாகரத்து வழக்கை முடித்து வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
27 ஆண்டு திருமண வாழ்வு!
முதல்வர் விஜய் - சங்கீதா திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகும் நிலையில், அண்மையில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
விவாகரத்து மனுவில், 1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ், விஜய் மீது திருமணத்தை மீறிய உறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
முதல்வர் விஜய் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நடிகையுடன் உறவில் இருந்ததை ஏப்ரல் 2021-இல் தான் கண்டறிந்ததாகவும் அதன்பிறகு, விஜய் தனது நிதி விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தன்னைக் கட்டுப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதன்பிறகு பல முறைகளில், திருமண வாழ்வை மேம்படுத்த தான் பல முயற்சிகள் எடுத்தபோதும் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே திருமண உறவை புதுப்பிக்க இயலாது என்று முடிவுக்கு வந்து விவாகரத்து கோருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், இன்று விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால், சங்கீதா திடீரென விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதன்பிறகு என்ன நடக்கலாம்?
முதல்வர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றிருப்பதால்,
பொதுவாக
இருவரும் சமரசமாகி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுக்கலாம்.
விவாகரத்து கோரும் காரணங்களில் புதிய காரணங்கள் இருந்தால் அல்லது புதிய பிரச்னைகள் இருந்தால் அதனையும் சேர்த்து சங்கீதா புதிய விவகாரத்து வழக்குத் தொடரலாம்.
ஒருவேளை, இருவரும் சம்மதத்துடன் பிரிய ஒப்புக் கொண்டால் பரஸ்பர ஒப்புதலுடன் விவகாரத்துக் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது ஏன்? அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றி இரு தரப்பிலிருந்து யாராவது விளக்கமோ, அறிக்கையே வெளியிட்டால்தான் உண்மை என்னவென்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Divorce case withdrawn! Why did Chief Minister Vijay's wife Sangeetha make this sudden decision? What might happen next?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.