FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சேலம் மேச்சேரியில் திறந்த வேனில் முதல்வர் விஜய் சாலை வலம்!

சேலம் மேச்சேரியில் திறந்த வேனில் சாலை வலம் சென்ற முதல்வர் விஜய்...

1 செப்டம்பர் 2026, 10:39 am IST
முதல்வர் விஜய் - DIPR
பகிர்:

சேலம் வந்துள்ள முதல்வர் விஜய், மேச்சேரியில் இருந்து திறந்த வேனில் நின்றபடி சாலைவலம் சென்றார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய், மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணை திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், கட்சியினர் பலரும் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து காமாலபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை திறக்கும் விழாவுக்கு காரில் வருகிறார் முதல்வர். வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மக்கள் மலர்களைத் தூவி அவருக்கு வரவேபு அளிக்கின்றனர்.

மேச்சேரி அருகில் வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி சாலை வலம் மேற்கொண்டார். கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கையசைத்தார். மக்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது

மேலும் இந்த விழாவில் போலீசார் 3,800-க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

Mettur dam opening: cm vijay roadshow in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments