மேட்டூர் அணை திறப்பு: சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!
மேட்டூர் அணை திறப்பையொட்டி சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு...
மேட்டூர் அணை திறப்பையொட்டி சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய், மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.
இதற்காக தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சென்னையில் இருந்து விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், கட்சியினர் பலரும் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை திறக்கும் விழாவுக்கு காரில் வருகிறார் முதல்வர். வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது.
Mettur Dam Opening: Grand welcome for Chief Minister vijay in Salem
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.