FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது குறித்து...

1 செப்டம்பர் 2026, 7:45 am IST
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

இன்று மாதத்தின் முதல் நாள் (செப். 1) என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ. 957.50-க்கு அதே விலையில் தொடர்கிறது.

Advertisement

Advertisement

உலகளாவிய சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரிகள், சரக்குக் கட்டணங்கள், ஜிஎஸ்டி, பிற செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், இந்தியன் ஆயில் உள்ள நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதக்கும்மேல் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. உலகளாவிய அரசியல் பதற்றம் அல்லது உற்பத்திக் குறைப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கியதிலிருந்து சிலிண்டரின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Price of commercial cylinders hiked in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments