FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவிகள் காயம்! புதுக்கோட்டை அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

அரசுப் பேருந்திலிருந்து மாணவிகள் கீழே விழுந்த விவகாரத்தில் நடவடிக்கை...

28 வினாடிகள் முன்பு
புதுக்கோட்டையில் அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை நடத்துநர் கீழே தள்ளிவிட்டதாக புகார் ... - X
பகிர்:

புதுக்கோட்டை அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை நடத்துநர் கீழே தள்ளிவிட்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாள்சத்திரம் சத்திரம் அருகே கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் புதன்கிழமை காலை ஏறியுள்ளனர்.

அப்போது கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி அந்த மாணவிகளை நடத்துநரும் பேருந்தில் இருந்தவர்களும் கீழே இறங்கச் சொல்லியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து நடத்துநர், அந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்க கதவைத் திறந்துள்ளார். அப்போது மாணவிகள் வரிசையாக கீழே விழுந்துள்ளனர். மாணவி ஒருவரின் காலில் பேருந்து டயர் ஏறியதாகவும் கூறப்படுகிறது.

இதில் 8 மாணவிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்த பழங்குடியின கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் அர்ஜுனன், நடத்துநர் மணிகண்டன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

summary

Girl students injured - Pudukkottai government bus driver and conductor suspended!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments