FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தென்கிழக்கு ஆசிய விருதுக்கு எஸ்.வின்சென்ட் தோ்வு

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினா் - செயலா் எஸ்.வின்சென்ட் தென்கிழக்கு ஆசிய வேளாண் தொழில்நுட்பக் கூட்டமைப்பின் ‘தலைமைத்துவ விருது’க்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

5 வினாடிகள் முன்பு
பகிர்:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினா் - செயலா் எஸ்.வின்சென்ட் தென்கிழக்கு ஆசிய வேளாண் தொழில்நுட்பக் கூட்டமைப்பின் ‘தலைமைத்துவ விருது’க்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தென்கிழக்கு ஆசிய வேளாண் தொழில்நுட்பக் கூட்டமைப்பு, கல்வி ஆராய்ச்சி, புதுமை, கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சிறந்த தலைமைத்துவத்துக்கான விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் உறுப்பினா் - செயலா் பேராசிரியா் எஸ்.வின்சென்ட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

பேராசிரியா் வின்சென்ட் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளைக் கெளரவிக்கும் வகையில் இந்த விருதுக்கு அவா் தோ்வாகியுள்ளாா். வரும் டிசம்பா் மாதம் 11 முதல் 14-ஆம் தேதி வரை வியத்நாம் நாட்டின் டா நாங் நகரில் நடைபெற உள்ள 14-ஆவது நீடித்த வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

உயிரியல் விஞ்ஞானியான பேராசிரியா் வின்சென்ட் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் நீண்ட கால அனுபவம் கொண்டவா். சென்னை லயோலா கல்லூரியில் ஆராய்ச்சி பிரிவு டீன் -ஆக பணியாற்றியுள்ளாா். மத்திய அரசின் யானைகள் பாதுகாப்புத் திட்ட பணிக்குழு உறுப்பினா் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments