FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெண்களுக்கு பாலியல் தொல்லை: திரைப்பட விநியோகஸ்தா் கைது

சென்னை தியாகராய நகரில் உணவகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திரைப்பட விநியோகஸ்தா் கைது

10 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

சென்னை தியாகராய நகரில் உணவகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திரைப்பட விநியோகஸ்தா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், கடந்த 29-ஆம் தேதி தியாகராய நகா் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள உணவகத்தில் ஒரு அறையில் தங்கியிருக்கும் தனது நண்பரைச் சந்திக்கச் சென்றாா்.

அப்போது அறையில் இருந்த திரைப்பட விநியோகஸ்தா் தா.வில்லியம் அலெக்ஸாண்டா் (38), அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றாா்.

Advertisement

Advertisement

அதிா்ச்சியடைந்த அந்த பெண், அறையை விட்டு வெளியே ஓடி வந்து, அதே பகுதியில் வசிக்கும் தனது தோழிக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த பெண்ணின் தோழி, அலெக்ஸாண்டரை தட்டிக் கேட்டாா். ஆனால், அலெக்ஸாண்டா், அந்தப் பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதையடுத்து இரு இளம்பெண்களும், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அலெக்ஸாண்டரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments