போராட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை! நிர்மல் குமார்
பல்வேறு போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது பற்றி...
தமிழகத்தில் பல்வேறு போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
அப்போது நீட் எதிர்ப்பு போராட்டம், என்எல்சி போராட்டம் தொடர்பான வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில்,
"போராட்டங்கள் எல்லாமே அமைதியாக தொடங்கப்பட்ட போராட்டங்கள் தான்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும் அடக்குவதற்காகவும் மிரட்டுவதற்காகவும் அவர்களை வலிக்கு கொண்டுவருவதற்காக மட்டுமே வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அதுபோன்ற அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோல செவிலியர்கள் உள்பட பல போராட்டங்களின் வழக்குகளையும் ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
பின்னர் எ.வ. வேலு, "முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கதுதான், ஆனால் விவாதத்திற்குரிய விஷயங்களை 110 விதியின் கீழ் அறிவிக்கக் கூடாது. ஏனெனில் 110 விதியின் கீழ் உள்ள அறிவிப்புகள் எதுவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அப்படி இருக்க முதல்வர், 'முந்தைய அரசு' என்று கூறும்போது அதுவே விவாதத்திற்கு உள்ளாகிறது' என்று கூறினார்.
உடனே பேரவைத் தலைவர், 'முதல்வர் இந்த அறிவிப்பை 110 விதியின் கீழ் தெரிவிக்கலாம். வீதியில் இடம் இருக்கிறது. இதனை பேரவை ஏற்றுக்கொள்கிறது. விவசாயிகளும் ஆசிரியர்களும் இதனை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
Steps being taken to withdraw all protest-related cases: Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.