முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான (எம்.டி. யோகா-நேச்சுரோபதி) விண்ணப்பப் பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான (எம்.டி. யோகா-நேச்சுரோபதி) விண்ணப்பப் பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2026-2027 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்த படிப்புக்கான தகவல் தொகுப்பேட்டை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்வுக்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
Advertisement
Advertisement
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து ‘செயலா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநா் அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106’ என்ற முகவரிக்கு செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு வரும் 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.