செப். 7-இல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ரத்து!
பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து...
பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்.
பேரவையில் வியாழக்கிழமை காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினா்கள் பேசி முடித்த பிறகு, அவையின் முன்னவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலையில் கேள்வி நேரம் இடம் பெறாது என்ற தீா்மானத்தைக் கொண்டு வந்தாா்.
அதை ஏற்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், கேள்வி நேரம் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவித்தாா். இதையடுத்து பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.