இந்த தீர்மானம் யாருடைய குழந்தையும் அல்ல; கோரிக்கை விடுப்பதெல்லாம் வரலாறு ஆகாது! நிர்மல் குமார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வரும் தீர்மானம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியது...
கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது, எப்போது செயல் வடிவத்திற்கு வருகிறதோ யார் செயல்படுத்துகிறார்களோ அதுதான் வரலாறு என்று பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் முடிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும் இதுதொடர்பாக இதுவரை இரண்டு முறை பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம் என்றும் பேசினார்.
Advertisement
Advertisement
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார்,
"சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் முமொழியப்பட்டது இதுவே முதல்முறை. ஏனெனில் இதற்கு முன்னதாக ஆங்கிலத்தை முதன்மை மொழியாகவும் அதன்பிறகு தமிழ் மொழி என்றே தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
தற்போதைய தீர்மானத்தில் தமிழை முதன்மை மொழியாக அதன்பின்னர் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
இதுவரை நிறைய வரலாறு இருக்கிறது என்று திமுக உறுப்பினர் கூறினார். கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது. எப்போது செயல் வடிவத்திற்கு வருகிறதோ யார் செயல்படுத்துகிறார்களோ அதுதான் வரலாறு.
இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்திருக்கலாம். இது யாருடைய குழந்தையும் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை. அதை தமிழக முதல்வர் கொடுத்திருக்கிறார்" என்றார்.
This resolution is the demand of the people of Tamil Nadu: Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.