FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோரிக்கையை நிறைவேற்றினால் ரூ. 10 வாங்க மாட்டோம்: டாஸ்மாக் ஊழியர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக...

4 செப்டம்பர் 2026, 12:47 pm IST
டாஸ்மாக் கடை - கோப்புப்படம்
பகிர்:

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால் இன்று முதல் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்க மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கடை வாடகை - மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால், இன்று முதல் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

இவர்களின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 137 கடைகளும் இன்று(செப். 4) அடைக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ. 10 கூடுதலாக வசூலித்ததாக எழுந்த புகாரின்பேரில், கடந்த இரு நாள்களில் மொத்தம் 217 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

TASMAC employees have stated that if their demands are met, they will not charge an additional rs. 10 per bottle starting today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments