டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன்!
மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் தம்பி அசோக்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று(அக். 1) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஆஜாரன மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மனுதரார் கடந்த 62 நாள்கள் சிறையில் இருந்து வருவதாகவும், ஏற்கனவே காவல்துறை காவலில் எடுத்து விசாரித்து விட்டது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக காவல்துறை தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்குரைஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, மனுதராரிடம் இன்னும் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும் மனுதரார் கார்த்திக் மறு உத்தரவு வரும் வரை காலை, மாலை இருவேளையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையொப்பம் இட வேண்டும். பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The Madras High Court has ordered the grant of conditional bail to Moolanur Karthik, who was arrested in the TASMAC irregularities case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.