FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடையடைப்புப் போராட்டம்! டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் இடைநீக்கம்

டாஸ்மாக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

27 வினாடிகள் முன்பு
டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

டாஸ்மாக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையைவிட அதிகமாக வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இருந்தபோதிலும், மதுபானங்களுக்கு நிர்ணயித்த விலையைவிட அதிக விலை வாங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களின் பணியிடை நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரித்தபோதிலும், இரு நாள்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் 38 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

34 supervisors suspended for participating in the TASMAC shop closure protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments