சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஆசிரியர் நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறித்து...
ஆசிரியர் நாளை முன்னிட்டு சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வி உலகமும் ஆசிரியர் உலகமும் போற்றும் நன்னாள். பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள்.
இந்நாளில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
“ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!
நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் செய்யறிவு(ஏஐ) காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!
அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் நாளில் உறுதிகொள்வோம்!” என கூறியுள்ளார்.
Creating a generation that asks the right questions is the great task of teachers: M.K. Stalin extends greetings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.