FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை குறித்து திமுக எம்எல்ஏ கே.என். நேரு கூறியது குறித்து...

5 செப்டம்பர் 2026, 5:13 pm IST
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.என். நேரு - ANI
பகிர்:

திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை பழிவாங்கும் நடவடிக்கை என கே.என். நேரு தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.என். நேரு பேசியதாவது, "டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வீட்டில் சோதனை நடத்துவதாகக் கூறினர். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீடுகள், எனது சகோதரரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இருப்பினும், முறைகேடு நடந்ததாக எந்த ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலுவலகம் சார்ந்த குறிப்பையும், சகோதரர் வைத்திருந்த வரவு - செலவுக் கணக்கு குறிப்பை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்கள் தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் சோதனை நடத்தினர்.

Advertisement

Advertisement

அவர்களுக்கான முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்கினோம். நீதிமன்றத்தில் ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கு இருப்பதால், புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து எதுவும் விசாரிக்கவில்லை.

அரசும் காவல்துறையும் சோதனை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறலாம். ஆனால், அரசியல்ரீதியாக பார்க்கும்போது, எங்களை மிரட்டி வைப்பதற்காக நடந்திருக்கலாம். இது பழிவாங்கும் நடவடிக்கைதான்" என்று தெரிவித்தார்.

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10 இடங்களிலும் இன்று (செப். 5) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.

summary

DVAC search was an act of political vendetta, Former DMK Minister KN Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments