தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் விஜய் புகழாரம்!
தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
ஆசிரியர் நாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, ”தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் செப். 5 ஆம் தேதி ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!
ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Extending his wishes ahead of Teachers' Day, Chief Minister Vijay praised teachers as "distinguished educators who serve selflessly."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.