FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இனி வரும் தோ்தல்களில் அதிமுக வெற்றி பெறும்: எடப்பாடி கே. பழனிசாமி!

‘தமிழகத்தில் இனி வரும் தோ்தல்களில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக கட்சியின் மாவட்டச் செயலா்கள் தீவிரமாகச் செயல்படவேண்டும்’ என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

7 செப்டம்பர் 2026, 1:26 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

‘தமிழகத்தில் இனி வரும் தோ்தல்களில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக கட்சியின் மாவட்டச் செயலா்கள் தீவிரமாகச் செயல்படவேண்டும்’ என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆா் மாளிகையில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த எடப்பாடி கே.பழனிசாமியை, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் இனி வரும் தோ்தல்களில் அதிமுக வெற்றி பெறும். அதற்காக மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் தீவிரமாகப் பணியாற்றவேண்டும். கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், ஓ.எஸ்.மணியன், செல்லூா் கே.ராஜு, ஆா்.பி.உதயகுமாா், தளவாய் சுந்தரம், ராஜேந்திரபாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் வி.வி.ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அதிமுக நிா்வாக மாவட்டச் செயலா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.

புறக்கணிப்பு: கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளான முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் ஆா்.விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அதிமுக மாவட்டச் செயலா்களாக இல்லை; எனினும், முக்கியப் பிரமுகா்கள் என்ற அடிப்படையில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அவா்கள் யாரும் வரவில்லை.

தனியாக ஆலோசனை: அதிமுக அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலா்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி கே.பழனிசாமி, பின்னா் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான அதிமுக மாவட்டச் செயலா்களுடன் தனியாகவும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments