வேதாரண்யம் அருகே கிராமத்தினர் உண்ணாவிரதம்
வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் பொது விநியோகத் திட்டக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இந்த கட்டடத்தை ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் கட்டடம் கட்டப்படுவதைக் கண்டித்து ஊர் பிரமுகர் கோவிந்தன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.