FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம்! முதல்வருக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடிதம்!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை.

7 செப்டம்பர் 2026, 3:11 am IST
பகிர்:

கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க தலைவா் அ.அன்பழகன், முதல்வா் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையிலிருந்து தினமும் சுமாா் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்டோா் பயணிக்கின்றனா்.

தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைகின்றனா். இந்தத் துறையின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ.900 கோடி நேரடி வருவாயும், ரூ.3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைக்கிறது.

Advertisement

Advertisement

ஆம்னி பேருந்துகளுக்கான சுமாா் 300 அனுமதி விண்ணப்பங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே அனுமதி பெற்று சாலை வரி செலுத்திய பல பேருந்துகளுக்கும் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் உரிமையாளா்களுக்கும் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கோயம்பேட்டில் தற்போது ஆம்னி பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமாா் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும். ஆனால், தினமும் 1,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதால் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் என்ற பல்முனை பேருந்து நிலைய முறையை உருவாக்கி, கோயம்பேடு சிஎம்டிஏ பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் வட, மத்திய சென்னை பயணிகளின் நேரம், செலவு மற்றும் பயணச் சிரமம் குறையும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments