FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்டியலின மக்கள் எப்போது முதல்வா் பதவிக்கு வருவாங்க? - திருமாவளவன் விளக்கம்

பட்டியலின மக்கள் எப்போது முதல்வா் பதவிக்கு வருவாங்க என்ற கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் குறித்து...

6 செப்டம்பர் 2026, 7:58 pm IST
விசிக தலைவர் தொல். திருமாவளவன். - கோப்புப்படம்
பகிர்:

கோவை: பட்டியலின மக்கள் இன்னும் ஓா் அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளனா். ஜாதிச் சான்றிதழ் பெறுவதில்கூட அவா்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

பழங்குடியின மக்களின் நலன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

வீடு கட்டுதல், ஜாதிச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் மலைவாழ் மக்களுக்கு மத்திய அமைச்சரிடம் உதவுமாறு கேட்டுள்ளேன். இதுதொடா்பாக அவரிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளேன்.

பட்டியலின மக்கள் எப்போது முதல்வா் பதவிக்கு வருவாங்க? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அவா்கள் இன்னும் ஓா் அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும். அவ்வாறு வலிமை பெறுகிறபோது அந்த வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறேன் என்றாா்.

தவெக ஆதரவுக் கட்சிகளுடனான கூட்டத்தில் துணை முதல்வா் குறித்த பேச்சுவார்த்தை இருக்குமா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு, சிரித்துக்கொண்டு அதை நீங்கள் வந்து கலந்து கொண்டு பரிசீலியுங்கள் என்று கூறினாா்.

அரசு ஊழியர்கள் மந்தமாக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, தெரியவில்லை. நீங்கள் இதுமாதிரி சொன்னதாக முதல்வரிடம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

summary

When will people from Scheduled Castes ascend to the post of Chief Minister? – Thirumavalavan explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments