சாதிய பாகுபாடு: ஊராட்சி செயலர் பணி நீக்கம்!
ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
தூய்மைப் பணியாளரிடம் சாதிய பாகுபாடு காட்டியது தொடர்பான புகாரில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி செயலர் ரூபா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தூய்மைப் பணியாளர் சசிகலா அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
"வன்கொடுமை புகார் மீது நடவடிக்கை!
சாதி பாகுபாடுடன் தாம் நடத்தப்படுவதாக ஊராட்சி செயலர் மீது, தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நமது துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி செயலர் இன்று (செப். 7) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய காலங்கள்போல் அல்லாமல், சாதி பாகுபாடுகளை எந்த வகையிலும் அனுமதிக்காமல், நமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Rupa, the Panchayat Secretary of Kambur near Kottampatti in Madurai district, has been dismissed from service following a complaint regarding caste-based discrimination against a sanitation worker.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.