FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு

குதிரை பேரம் புகார் குறித்து பேரவையில் ஐயுஎம்எல் உறுப்பினர்கள் பேசியது பற்றி...

7 செப்டம்பர் 2026, 2:14 pm IST
ஐயுஎம்எல் உறுப்பினர்கள் - TN assembly
பகிர்:

அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியது திமுகதான் என்று அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

ஐயுஎம்எல் மீதான குதிரை பேரம் குறித்த புகாரில், எம்எல்ஏ சையது பாருக் பாஷா பேசுகையில்,

"நான் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் நான் ஒன்றும் தவறாகப் பேசவில்லை. எங்கள் தலைவர் சொன்னதைத்தான் நான் பொதுக்குழுவில் சொன்னேன்.

Advertisement

Advertisement

திமுக - அதிமுக இணைந்து அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அந்த கொள்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கொள்கை கூட்டணி உள்ள தவெகவை ஆதரிப்போம் என்று எங்கள் தலைவர் கூறினார். நாங்கள் எந்த கோடிக்கும் போக மாட்டோம்" என்றார்.

உடனே அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லீம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் என பேசுவதை ஏற்க முடியாது. ஐயுஎம்எல் எம்எல்ஏ சையது பாருக் பாஷா, அதிமுகவினர் பற்றி பேசவில்லை.

மே 7 ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியை தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். திமுகதான் அந்த முடிவை எடுத்தது. மே 8 ஆம் தேதி வேறொரு முடிவை எடுத்துக் கூறியது. ஐயுஎம்எல் இதனை ஏற்க மறுத்த காரணத்தால் எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டியது வரும். ஆளுநர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்" என்று பேசினார்.

summary

DMK - AIADMK planned coalition government: Shahjahan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments