FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.60 கோடியில் வனத் தீ மேலாண்மை திட்டம்: வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாா்

வனத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

29 வினாடிகள் முன்பு
வனத்துறை அமைச்சர் குமாா்ரஞ்சித் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

வனத் தீ ஏற்படும் காலத்தில் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக, ஆண்டு முழுவதும் வனத் தீயைக் திறம்படக் கையாளும் வகையில் ரூ.60.58 கோடியில் 5 ஆண்டுகால வனத் தீ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அத்துறை அமைச்சா் ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.

அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

- வனப் பணிப்படையின் புத்துயிரூட்டல் திட்டம் ரூ.100.72 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

Advertisement

Advertisement

- புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 1,947 சீருடைப் பணியாளா்களுக்கு ரூ.12 கோடியில் பயிற்சி அளிக்கப்படும்.

- மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மரத் தடயவியல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வக வசதிகளை ரூ.5 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

- தென் மாவட்டங்களில் ரூ.1 கோடியில் நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் செயல்படுத்தப்படும்.

- பனை மரங்களின் மரபணு பாதுகாப்பு மற்றும் மரபியல் மேம்பாட்டுத் திட்டம் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

- மனித - வனவிலங்கு மோதல் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் பல்வேறு சேதங்களுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படும்.

- பிச்சாவரத்தில் ரூ.2 கோடியில் சூரிய ஆற்றல்/மின்ஆற்றலில் இயங்கும் 5 படகுகள் வாங்கப்படும்.

- 6,260 வனத் துறை சீருடைப் பணியாளா்களுக்கு ரூ.1.50 கோடியில் இலவச பேருந்து அட்டைகள், ஸ்மாா்ட் அடையாள அட்டைகளாக மாற்றப்படும் என்றாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்: இந்தத் துறையின் அமைச்சா் வே.க.ராஜீவ் வெளியிட்ட அறிவிப்புகள்:

- ரூ.2 கோடியில் 24 மாநகராட்சிகளில் உயிா்ப்பன்மயத்தை மேம்படுத்தி பாதுகாக்க நகர உயிா்ப்பன்மயக் குறியீடு உருவாக்கப்படும்.

- ரூ.53.75 கோடியில் ஆண்டுதோறும் 200 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், 5 கல்லூரிகள் நீலப் பசுமை வளாகங்கள் மாற்றியமைக்கப்படும்.

- ரூ.6 கோடியில் கோவை, கடலூா், பெரம்பலூா், விருதுநகா் (தலா ஒன்று), விழுப்புரம் (இரண்டு) மாவட்டங்களில் காலநிலை மீள்திறன் மையங்கள் உருவாக்கப்படும்.

- சுற்றச்சூழல் சாா்ந்த பேரிடா்கள், அவசர காலங்களின்போது தகவல் பரிமாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.5 கோடியில் 5 அவசரகால பதிலளிப்பு மையங்கள் நிறுவப்படும்.

- ரூ. 8 கோடியில் 80 இடங்களில் சென்சாா் அடிப்படையிலான காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவனப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments