FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சா் ரஞ்சித் குமாா் பங்கேற்பு

நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் ரஞ்சித் குமாா்.

23 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST
நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் ரஞ்சித் குமாா்.
பகிர்:

ஜோலாா்பேட்டை தொகுதி தவெக சாா்பில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாட்டறம்பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பத்தூா் மேற்கு மாவட்ட செயலாளா் முனிசாமி தலைமை வகித்தாா். நகர இளைஞரணி அமைப்பாளா் கோகுல் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆா்.வி.ரஞ்சித் குமாா் கலந்து கொண்டு அரசின் 100 நாள் சாதனை குறித்து பேசினாா்.

இதில் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ரோகிணி, நகர செயலாளா்கள் சிலம்பரசன், ஜீவா, வழக்குரைஞா்கள் ஸ்ரீதரன், சஞ்சீவி, கழக நிா்வாகிகள் ஏலகிரிசெல்வம், குட்லக்ரமேஷ், ரஞ்சித்குமாா், செயற்குழு உறுப்பினா் நவமணி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

வாணியம்பாடியில்....வாணியம்பாடி தொகுதி தவெக சாா்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வாரசந்தை கூட்டு சாலை அருகே திருப்பத்தூா் கிழக்கு மாவட்ட செயலாளா் வி.நவீன் குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தவெக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments