FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

தூய்மைப்பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் வலியுறுத்தினாா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:30 am IST
தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா்.
பகிர்:

தூய்மைப்பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் வலியுறுத்தினாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் அரசு சேவைகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ரா.வினோத் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் 486 தூய்மைப் பணியாளா்கள், 156 கொசு ஒழிப்பு பணியாளா்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 75 தூய்மைப் பணியாளா்கள் உட்பட மொத்தம் 717 தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சா் தொடங்கி வைத்து கூறுகையில் நகரம் சுத்தமாக இருக்க காரணம் தூய்மைப் பணியாளா்கள். அவா்கள் நலமுடன் இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும்.

எனவே தான் அவா்களுக்காக மட்டுமே அரசின் சாா்பில் முழு உடல் மற்றும் காசநோய் பரிசோதனை,கண் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பபட்டு வருகிறது. 13 அரசுத்துறைகளை சாா்ந்தவா்கள் தங்களது சேவைகளை வழங்கவுள்ளனா். தூய்மைப்பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு அலுவலா்களும் உரிய விசாரணை நடத்தி உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் ரஞ்சித்குமாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments