FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெண்கள் பாதுகாப்பு! முதல்வர் விஜய் பேச்சுக்கு பிரேமலதா பதில்!

முதல்வர் உரையில் காவல்துறை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

17 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பேரவையில் இன்று ஆற்றிய உரையில், காவல்துறை குறித்த எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை, இன்று மாலைக்குள் ஏதேனும் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கூறியிருக்கிறார்.

முன்னதாக, பேரவையில் பேசிய பிரேமலதா, பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் பேரவையில் பேசியிருக்கிறார். அதை ஒரு பெண் தலைவராக நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில், முதல்வர் கவனத்துக்கு சில விஷயங்களை கொண்டு போகணும். முதல்வர் விஜய் கருத்து பொதுவான கருத்தாக இருக்கணும். இன்று பெண் தலைவர்களாக இருக்கும் அத்தனை பெயரையுமே, சமூக வலைத்தளங்களில் கொச்சையாக பேசுவதில் தவெகவினரும், தவெகவைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதையும் முதல்வர் கவனத்தில் கொண்டு தவெகவைச் சேர்ந்த உறுப்பினர்களை கண்டிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் பதிய வைக்கிறேன் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

Advertisement

Advertisement

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், காவல்துறை மானிய கோரிக்கையில் மிக முக்கிய அறிவிப்பு வரும் என லட்சக்கணக்கான காவலர்களும், அவர்களது குடும்பத்தினரும் காத்து கொண்டிருந்தனர்.

ஆனால், காவல்துறை குறித்த எந்த முக்கிய அறிவிப்பும் முதல்வர் உரையில் இல்லை. இதனால் பெருத்த ஏமாற்றம். அதையும் பேரவையில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இன்று மாலைக்குள் அவை நடவடிக்கைகள் முடிவதற்குள், காவல்துறையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஏதாவது அறிவிப்பு வர வேண்டும் என சொல்லி உள்ளேன்.

ஊர்க்காவல் படையில் மிகக் குறைந்த வருவாயில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கான ஊதிய உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்றவையும் அறிவிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சைபர் கிரைம்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தவெக அரசு முற்றிலுமாக தடுக்க வேண்டும். அது மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பெண்களை பற்றி தவறாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உரிய அளவுக்கு நெல் கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். காவிரி திறந்தாலும் கடைமடை வரை இன்னும் நீர் செல்லவில்லை. காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், பத்திரபதிவு துறையில் லஞ்சம் குறைய வேண்டும், முன்னாள் ஆட்சியாளர்கள் ஊழல் குறித்து சுட்டிக்காட்டி உள்ளார், லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி தவெக கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments