மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக டிடிவி தினகரன் அறிவிப்பு...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
"நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். இரு தொகுதிகளிலும் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அந்த உறுப்பினர்கள் கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு ஆளும் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.
அதிமுக வெற்றி பெறுவதற்காக அமமுக அவர்களுடன் சேர்ந்து போராடும். அவர்களுடன் இணைந்து பணியாற்றும். வருகிற செப். 13 ஆம் தேதி அதிமுக தலைவர்கள் என்னைச் சந்திக்க உள்ளனர்.
Advertisement
Advertisement
போக்குவரத்து நெரிசலான இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதுபோல முதல்வரின் வெளிநாட்டு பயணம் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வீடு அருகே பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது என்று நினைக்கிறேன். இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் ஒரு தீர்ப்பு வழங்குவார்கள். துக்ளக் ஆட்சி போல இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நிஜத்தில் வில்லனாகவும் இருக்கிறார் விஜய்" என்று கூறினார்.
Support for AIADMK in Madhuranthakam and Dharapuram by-elections: TTV Dhinakaran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.