FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றி பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் சேர்க்கப்பட வேண்டும்: டிடிவி தினகரன்

வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனுமதி மறுக்கப்படுவதாக தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தது குறித்து...

வெற்றி பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - கோப்புப் படம்
பகிர்:

வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனுமதி மறுக்கப்படுவதாக தவெக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் அனுமதிக்கக் கோரி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் இன்று (அக். 22) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் திருநர்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தும், இதுவரை உரிய அரசாணை பிறப்பிக்கப்படாததால், பேருந்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பயணிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அரசின் அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான இந்த முரண்பாடு, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

வெறும் ரீல்ஸ்-க்காக அவசரகதியில் அறிவிப்புகளை வெளியிடுவதும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசாணைகளைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவதும் தவெக அரசின் வாடிக்கையாகிவிட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்கெட்டு வருகிறது.

எனவே, சட்டப்பேரவையில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் துணையாளர் ஒருவரும் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உரிய அரசாணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

summary

AMMK Leader TTV Dhinakaran urges TVK government to include differently-abled people in the Vettri Payanam scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments