மேட்டூர் அணையில் பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஆய்வு!
மேட்டூர் அணையில் அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஆய்வு மேற்கொண்டது குறித்து...
மேட்டூர் அணையில் அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் குல்சன் ராஜ் ஞாயிர்றுக்கிழமை (செப். 20) ஆய்வு மேற்கொண்டார்.
அணை பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினரும் நீரியல் மற்றும் இயந்திரவியல் நிபுணருமான குல்சன் ராஜ் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் வலது கரையில் மேல்மட்டம், கீழ்மட்டத்தில் மற்றும் இடது கரையில் உள்ள 16 கண் மதகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement
மதகுகள் நல்ல நிலையில் இயங்குகிறதா? பராமரிப்பு சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, மோட்டார் படகில் சென்று நீர் தேக்க பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Gulshan Raj, a member of the Dam Safety and Evaluation Committee, conducted an inspection at the Mettur Dam on Sunday (Sept. 20).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.