FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு விவரம் பற்றி...

31 வினாடிகள் முன்பு
சென்னையில் கொசு ஒழிப்பு பணி - X / Greater Chennai Corporation
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் நேற்று 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 71 பேருக்கு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 11 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் 17,348 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர 4,653 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் எனும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது.

summary

17,348 people across Tamil Nadu have been affected by dengue so far

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments